Breaking

Post Top Ad

Sunday, May 5, 2019

சீயோன் தேவாலய குண்டுத் தாக்குதல் மூலம் ஏற்பட்ட தீப்பரவலை துரிதமாகச் செயற்பட்டு கட்டுப்படுத்திய தீயணைப்புப் பிரிவிற்கு பாராட்டு

சீயோன் தேவாலய குண்டுத் தாக்குதல் மூலம் ஏற்பட்ட தீப்பரவலை துரிதமாகச் செயற்பட்டு கட்டுப்படுத்திய மாநகர தீயணைப்புப் பிரிவிற்கு மாநகர முதல்வர் பாராட்டு...

சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போது ஏற்பட்ட தீ அனர்த்தத்தினை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு மாநகர சபை முதல்வரால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாநரக சபையின் 18 ஆவது அமர்வு நடைபெற்ற வேளையிலேயே மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களால் இப்பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போது அங்கு ஏற்பட்ட தீப்பரவலை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் அதிவிரைவாகச் செயற்பட்டு துரிதமாகவும், தமது உயிரைப் பணயம் வைத்தும் பாரிய மேலதிக அனர்த்தங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அவர்களின் இந்தச் செயற்பாட்டுக்காகவே மாநகர முதல்வரினால் பாராட்டும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages