
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி குடாமுனைக் கல் பிரதேசத்தில் சிசு ஒன்றின் சடலத்தினை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிசுவின் சடலத்தை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் 11 வயது நிரம்பிய சிறுமியுடன் வசித்து வந்த பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக குறித்த சிறுமியும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பிரதேசத்திற்கு மாவட்ட குற்ற தடவியல் பொலிஸ் பிரிவினர் மற்றும் அரச சட்ட வைத்திய அதிகாரி சகிதம் மேலதிக விசாரணைக்காக சென்ற வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். பஸில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார்.
இதன்போது மேற்படி சந்தேகநபர் வசித்து வந்த வீடு மற்றும் வளவு போன்றவை தடவியல் பரிசோதனை செய்யப்பட்டதுடன் சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வளவின் ஒரு பகுதியில் குழியொன்றில் பொலித்தின் பை ஒன்றில் சுற்றி புதைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட சிசுவினை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
EA
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.