பிரதேச மக்களின் எதிர்ப்பை மீறி மரண வீடொன்றுக்கு முகத்தை மூடும் வகையில் உடையணிந்து வந்த பெண் மற்றும் அவரது கணவரை தாம் சிலாபம், ஜயபிம பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஜயபிம பிரதேசத்தில் வசித்தவர்கள் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதேசத்தில் இருந்து வெளியில் சென்றுள்ளதுடன் உறவினரின் மரண வீட்டுக்கு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் முகத்தை முற்றாக மூடியவாறு உடை அணிந்திருந்தார் எனவும் வேறு உடையை அணிந்து கொள்ளுமாறு பிரதேச மக்கள் கூறியதை அந்த பெண் கேட்கவில்லை என்பதால், பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அந்த பெண்ணையும் கணவனையும் கைது செய்துள்ளனர்.
இதன் பின்னர் இவர்கள் ஜயபிம பிரதேசத்தில் வசித்து வந்த வீட்டை சோதனையிட்ட போது வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழைய வாள் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் 36 வயதானவர் எனவும் அவரது கணவர் 33 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.