யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க வேண்டும் என நல்லிணக்க செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து கூறுகையில்,
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மாணவர்கள் இருவரும் அப்பாவிகள் என்று தமிழ் அரசியல்வாதிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரும் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் ஒளிப்படங்கள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டிருந்தன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே, சட்டமா அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் யாழ். பல்கலைக்கழத்தில் அமைதியான முறையில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், அப்பாவி மாணவர்களை கைது செய்து தடுத்துவைப்பது அந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.