Breaking

Post Top Ad

Monday, May 13, 2019

எனது தமிழ் சகோதரர்கள் அன்றும் இன்றும் சிறைச்சோறு சாப்பிடுகிறார்கள் ! என் மனம் கொதிக்கிறது-சுமணரட்ன தேரர் மீண்டும் அதிரடிகடந்த 21 ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை கண்டித்து அன்மையில் விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விகாராதிபதி சுமணரட்ன தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 21 ம் திகதி இடம்பெற்ற மதவழிபாட்டு தலங்கள் உல்லாச விடுதிகளில் மீது தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றிருந்தது ,இருந்தபோதும் மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இடம்பெற்ற குண்டு தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் எனது துக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.


அதேவேளை காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் மிகவிரைவில் குணமடைய பிராத்திக்கின்றேன்.

30 வருட யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நாட்டில் எமது பாதுகாப்பு படையினர் எமது தமிழ் சகோதர்கள் பலரும் தமது உயிரினை இழந்து யுத்தத்தினை முடிவுறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தனர்.

ஒரு பக்கம் சிங்கள பிள்ளைகளும் மறுபக்கம் தமிழ் பிள்ளைகளும் உயிர் தியாகம் செய்தனர் இதேபோன்று பல இழப்புக்கள் இடம்பெற்று கடந்த 10 வருடங்களாக சமாதானம் நாட்டில் ஏற்பட்டுள்ளது என மிகவும் நம்பிக்கையுடன் நாட்டை பார்த்துக் கொண்டிருந்தோம் .

ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்தாலும் சில விடயங்களை வேறு அடிப்படை வாதத்தினரால் இந்த நாட்டினுள் செயற்படுத்தப்பட்டு வருவதாக நாட்டின் அதிகாரிகள் ,பாதுகாப்பு பிரிவினர் ,புலனாய்வு பிரிவு மற்றும் அனைத்து மக்களுக்கம் இது போன்ற விடயங்கள் ஏற்படக்கூடும் என நான் அடிக்கடி அறியப்படுத்திக் கொண்டிருந்தேன்.

வெலிகந்தை புனானையில் அமைக்கப்பட்டு வரும் ஆசியாவிலேயே பெரிய பல்கலைக்கழகம் அதோ போன்று வில்பத்து கிழக்கு மாகாணங்களில் அவர்களுடைய அடிப்படை வாத செயற்பாடுகளினால் 30 வருடங்களாக யுத்தத்தினால் கவலைக்குள்ளான இந்த தமிழ் மக்கள் தற்போது சட்டியில் இருந்து நெருப்புக்குள் வீழ்ந்தது போன்று அம் மக்கள் துன்பத்திற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என நாம் பல தடைவைகள் அனைத்து விடயங்களையும் கூறிவந்தேன்

ஆனால் இந்த நாட்டில் அதிகாரிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை ஸஹரான் என்ற நபர் 2017 மட்டக்களப்பு சிறையில் இருந்து பிணையில் அவர் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் சென்று இன்று நாட்டிற்குள் இவ்வாறான அழிவை ஏற்படுத்தியவர் இந்த ஸஹாரான்

அப்போது நான் இதை கூறியிருந்தேன் ஆனால் நான் இனவாதி ,மதவாதி, என ஆனால் நான் இனவாதியுமல்ல மதவாதியுமல்ல நான் கூறுவது உண்மையையே தெல்தெனிய சம்பம், அலுக்கம சம்பவம், அம்பாறை சம்பவத்தில் நாம் கூறினோம் இதோ இவர்கள் நாட்டில் சிங்கள தமிழ் இனத்தை அழிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள் என

ஆனால் நாட்டின் அதிகாரிகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை தலையிருந்து கால் வரை முகத்தை மறைத்துக் கொண்டு கறுப்பு கபாயா உடுத்திக் கொண்டு நீதிமன்றத்திற்கும், கச்சேரிக்கும் வைத்தியசாலைக்கும் செல்கின்றார்கள் எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை இவர்கள் பெண்களா? ஆண்களா? யாரென

இவ்வாறான சம்பிரதாயங்களை பாவித்து தான் நாட்டினை அழிக்கக்கூடிய ஆயுதங்களை இவ் ஆடையினுள் மறைத்துக் கொண்டு உள்வருகின்றார்கள் இதற்கு தடையில்லை இதற்கான ஏற்பாடுகள் எதுவுமில்லை

இந்த நாடு பௌத்த நாடு இது பௌத்த நாடு போன்று ஏனைய இனங்களும் சமாதானமாக வாழக்கூடிய நாடு.

இந்து மதம், பௌத்த மதம் வரலாற்றிலிருந்து மிகப் பெரிய தொடர்புள்ளது இந்தியாவிலிருந்து இந்த நாட்டிற்கு வரும்போது இந்த இரு மதங்களும் அனைத்து தொடர்புகளும் இந்த தேசத்திற்குள்ளானது

நாட்டில் இந்த இனவாத பிரச்சனைகளை ஏற்படுத்தியவர்கள் யார் நம் நாட்டின் ஆட்சியாளர்கள். ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட இவ் விடயத்தை ஆட்சியாளர்களால் முடிவுக்கு கொண்டுவர முடியாமல் இருக்கின்றது

அவ்வாறாயின் அதற்கு பதிலை தேடிக் கொள்வது நாட்டின் தற்கால ஆட்சியாளர்கள் செய்தது என்ன? அனைத்து புலன்விசாரணை அதிகாரிகளையும் சிறைக்கு அனுப்பினார்கள் இன்றும் அவர்களை விடுவிக்கும் செயற்பாடுகள் எதுவுமில்லை மதகுரு என்ற ரீதியில் கவலைப்படுகின்றேன்.

அந்த இனத்தில் இருந்த அரசியல் தலைவர்களையும் இவ்வாறு சிறைக்கனுப்பி தமிழ் மக்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது தெளிவான பொறுப்பு , கடமை, என்பதனை இவ் அரசு இந்த நாட்டிற்கு வழங்க மறுத்துள்ளது

எமது நாட்டின் கத்தோலிக் ஆயர் ரஞ்சித் மல்கம நாட்டிற்கே தந்தையாகயுள்ளார் இவ்வாறான நிலையில் அவரது செயற்பாடுகள் பேச்சுக்களை பார்க்கும் போது எம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றார்.

எமக்கும் குருவானவர் முழு நாட்டிற்கும் தலைவரானார். எனவே தான் இந்த நாட்டில் பலரது உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது.

எனவே நான் அனைத்து மதகுருமாரிடம் வேண்டுவது லாகுகலை .அறுகம்பை இருந்து மூதூர் தோப்பூர் வரைக்கும் அடிப்படை வாத குழுக்களை பரிசோதனை செய்யவேண்டும் அவர்களிடம் வேண்டியளவு ஆயுதங்கள் இருக்கின்றது

வெலிகந்தை புனானையில் உள்ள பல்கலைக்கழகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. இல்லை எனில் மட்டக்களப்பில் இருந்து பொலநறுவை வரைக்கும் தமிழ் சிங்கள மக்கள் போகமுடியாமல் போய்விடும் நிலமைக்கு முகம் கொடுக்க வேண்டிவரும்

புலிகள் இருக்கும் போது கிழக்கு ,வடக்கு என பரவி இருந்தார்கள் இவர்கள் அவாறு இல்லை முழு நாட்டிலும் வியாபித்துள்ளார்கள். எனவே நாட்டின் அனைத்து ஆட்சியாளர்களும் மூளையை பிரயோகிக்க வேண்டும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இனப் பாதுகாப்பை பாதுகாக்க சட்டங்கள் கொண்டுவர வேண்டும். இதனை செயற்படுத்தா விட்டால் நாங்கள் நாட்டின் இனத்தவர்கள் என்பதனால் நீதியினை கையில் எடுக்க வேண்டிவரும்

மட்டக்களப்பு தமிழ் சகோதரர்களே இன ரீதியாக நாம் ஒன்றினைய வேண்டும் இன்னும் எங்கள் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்க விடுவதா? இல்லை இதனை தடுப்பதா? நீதியை கையில் எடுக்கவா? இல்லை தீர்வை எட்டுவதா?

வவுணதீவில் இரண்டு பொலிசாரின் கழுத்தை வெட்டியிருக்கின்றார்கள் வெட்டிய நாளிலிருந்து பாதுகாப்பு படையினர்கள்; புலிகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் யாராவது இருக்கின்றார்களா? ஏன பார்த்து பார்த்து கைது செய்தனர்; 6 மாதத்தின் பின்னர் தற்போது ஸஹரானின் சாரதியிடம் இருந்து ஆயுதம் கண்டு பிடித்தனர்

அவ்வாறு கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் உலகிற்கு எடுத்து காட்டுவார்கள் புலிகள் தான் சூத்திர தாரிகள் என எமக்கு அரசியல் இல்லை வேறு அமைப்புகளுடன் தொடர்புகளுமில்லை எனவே நாங்கள் எல்லோரும் இந்த அடிப்படைவாத பிரிவினையை இல்லாதொழிக்க நாட்டிற்காக நாம் ஒன்றினைந்து செயற்படுவோம் என்றார்No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages