
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் கரவெட்டி ஆதவன் விளையாட்டு கழக மைதான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மண்முனை மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் செ.சண்முகராசா, பிரதித் தவிசாளர் பொ.செல்லத்துரை உட்பட அதிகாரிகள், விளையாட்டுக் கழக நிருவாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரிடம் பிரதேச மக்களும், விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கம்பெரலிய திட்டத்தின் கீழ் இவ்விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்ககாக பத்து லெட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு அரங்கு நிர்மானிப்பதற்கான அடிக்கல் இன்றைய தினம் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.