Breaking

Post Top Ad

Wednesday, May 1, 2019

வவுணதீவு பொலிஸார் கொலையுடன் தொடர்புடைய சஹ்ரானின் சகாக்கள் மூவர் தடுத்துவைத்து விசாணை - பல தகவல்கள் வெளிவந்தது


மட்டக்களப்பு - வவுணதீவில் இரு பொலிசாரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரானின் சகாக்களான காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தடுத்துவைத்து விசாரித்துவருவதாகவும் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி புதன்கிழமை 01ம் திகதி காலை தெரிவித்தார்.

இவர்களில் ஒருவர் கடந்த 27 ஆம் திகதி காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் மற்றயவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் சகாவான சாரதியாவார்.


கடந்த வருடம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நள்ளிரவு  வவுணதீவு  சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் இருவரை இனம் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்த இரு கைதுப்பாக்கிகளை எடுத்துச் சென்றனர்.

இவ்வாறான நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் போராளிகள் இருவரை கைதுசெய்யப்பட்டு தடுத்துவைத்துள்ளது சி.ஐ.டி.யினர் கடந்த 6 மாதங்களாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந் நிலையில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து கடந்த 26 ஆம் திகதி வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி  தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் காத்தான்குடியில் வைத்து சஹ்ரானின்  சாரதியான 54 வயதுடைய  முகமது சரீப் ஆதம்லெப்பை  கைதுசெய்து மேற்கொண்ட விசாரனையின் போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முதல் தாக்குதல்  வவுணதீவில் இரு பொலிசார் மீதான தாக்குதல் என தெரியவந்தது.

இந்த வவுணதீவு தாக்குதலில் தொடர்புடைய  புதிய காத்தான்குடி 2 ஆம் பிரிவு மீன் சந்தை வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரையும், புதிய காத்தான்குடி எம்.எம்.ஜே. வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய  நபர் ஒருவரையும்  27 ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்தனர்.


இவர்களிடம் மேற்கொண்ட  விசாரணைக்கமைய கிடைத்த தகவலின்படி வவுணதீவு பொலிஸார் கொலையுடன் தொடர்புபட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages