எஸ்.நவா
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கம்பெரலிய துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்சித்திட்ட நிதி ஒதுக்கீட்டினை போரதீவுப்பற்று செயலக சமூகமட்டக் குழுக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பிரதேச செயலாளர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய பட்டிருப்பு தொகுதி ஒருங்கிணைப்பு இணைத் தலைவரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 97.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வீதிகளுக்கு 42 மில்லியன் விளையாட்டு மைதானங்களுக்கு 7 மில்லியன் பாடசாலை மலசல கூடம் அமைப்பதற்கு 5மில்லியன் மூன்று குளங்கள் அமைப்பதற்கு 9 மில்லியன் 20 ஆலயங்கள் புனரமைப்புக்கு 19.5மில்லின் 50 வீட்டுத்திட்ட அபிவிருத்திக்காக 15 மில்லியன் போரதீவுப்ற்று பிரதேசத்திற்கு ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இன்நிகழ்வின்போது பட்டிருப்பு தொகுதி ஒருங்கிணைப்பு இணைத் தலைவரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி பிரதம அதிதியாகவும் உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் கணக்காளர் எஸ்.நாகேஸ்வரன் மற்றும் திணைக்களத் தலைவர்கள் பொலிஸார் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம பொதுநல அமைப்புக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்த கொண்டிரந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.