மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் செய்கைபண்ணப்பட்ட சோளம் செய்கையில் படைப்புழுவின் தாக்கத்தல் நூற்றுக்கணக்கான ஏக்கர் சோளம் செய்கை அழிவடைந்தது. இந்த அழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்போது இளப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக மட்டக்களப்பு, மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவில் படைப்பு தாக்கத்தினால் சோளம் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (19ஆம் திகதி இளப்பீடுக்கான விவசாயத் திணைக்களத்தினால் காசோலை வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது இப் பிரதேசத்தைச் சேர்ந்த 95 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 18இலட்சம் ஐம்பதாயிரம் ரூபா காசோலைகள் உரிய விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், கமநல சேவைகள் திணைக்கள உதவி பணிப்பாளர் என்.ஜெகன்நாத், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, மாவட்ட கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன், மண்டபத்தடி கமநல சேவைகள் பிரிவின் பெரும்பாக உத்தியோகத்தர் உதயகுமார் மற்றும் விவசாய பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கான இவ் இளப்பீடுக் கொடுப்பனவினை வழங்கிவைத்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.