Breaking

Post Top Ad

Thursday, May 23, 2019

உயிர்த்த ஞாயிறன்று குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு கொக்கட்டிச்சோலையில் 31ஆம் நாள் நினைவஞ்சலி

 கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி 31ஆம் நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு   மட்டக்களப்பு மாவட்டதின் படுவான்கரை பிரதேசத்தின் கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.




பல்சமய அமைப்புக்கள், பொதுமக்ள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நினைவஞ்சலி அனுஷ்டிப்பின்போது இங்கு வருகைதந்தோரால் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி​வேண்டி தீபங்கள் ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.



மட்டக்களப்பு இயேசு சபைத் துறவி  ஜேசப் மேரி சுஅடிகளார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆரயத்தின பிரதம குரு மு.கு.சச்சிதானந்தக் குருக்கள், கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல தேரர், அருட் தந்தை ரி.லோரன், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளைத் தலைவர் ஏ.எம். காறூன் றசாதி, மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய ஏனைய மதருகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், தேசிய சமாதானப் பேரவையின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்கள், படுவான்கரை பிரதேச பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளிட்ட கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages