வவுணதீவு பிரதேசத்துல் “செமட்ட செவண” யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் வீட்டுத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், உதவி திட்டப் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், SPG எம்.ஜெகவண்ணன் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இன்றைய அடிக்கல் நடும் நிகழ்வு வவுணதீவு கிராமத்திலும் அதனையடுத்து காயான்மடு, விளாவட்டவான் போன்ற கிராமங்களில் இடம்பெற்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.