மட்டக்களப்பு ஏறாவூர்
பகுதியில் இருந்து காத்தான்குடி பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகள்
காத்தான்குடி பொலிசாரினால் கைபற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்
தெரிவித்தனர்
காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராச்சி ஆலோசனையின் கீழ்
காத்தான்குடி பொலிசாரும் , இராணுவத்தினரும் இணைந்து இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட
சுற்றிவளைப்பில் காத்தான்குடி கடற்கரை வீதி பகுதியில் வைத்து மாடுகள் ஏற்றிச்சென்ற
லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார்
தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இருந்து காத்தான்குடி பகுதிக்கு லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 14 மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் லொறியினை
செலுத்திய சாரதி மற்றும் உதவியாளர்
இருவரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி தெரிவித்தார்
காத்தான்குடி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ள 14 மாடுகள்
,மாடுகள் ஏற்றி வந்த லொறி மற்றும் சாரதி
,உதவியாளர் உட்பட சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு நீதவான் நீதி மன்ற நீதிபதி
முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
கஸ்துரி ஆராச்சி தெரிவித்தார்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.