உலகில் தனக்கென தனியிடத்தினைக்கொண்டுள்ள சுவாமி விபுலானந்த அடிகளாரின் 127வது ஜனன தின முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 127வது ஜனன தினம் இன்று காலை மாநகர திருநீற்று பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மாணவிகளினால் பண்ணிசை இசைக்கப்பட்டது
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவரும் ஓய்வுநிலை மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளருமான கே.பாஸ்கரன் ,, சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை அங்கத்தர்கள் மாநாகர சபை உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.