Breaking

Post Top Ad

Tuesday, April 30, 2019

இராணுவத்தினருக்கு குடிநீர் வழங்கிய சிறுமி – வைரலாகும் ஒளிப்படம்!



கல்முனையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு சிறுமி ஒருவர் குடிநீர் போத்தல் வழங்கும் ஒளிப்படம் வைரலாகி வருகின்றது.

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.


இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து தொடர்ந்தும் இலங்கை மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்களே தினமும் அரங்கேறியவண்ணமுள்ளன.

இந்தநிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய நேற்றைய தினம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி கடற்கரை வீதி தொடக்கம் சாய்ந்தமருது வரையான பிரதேசங்களில் இராணுவம், பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது கல்முனையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு சிறுமி ஒருவர் குடிநீர் போத்தல் வழங்கும் ஒளிப்படம் வைரலாகி வருகின்றது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages