Breaking

Post Top Ad

Sunday, April 7, 2019

அழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

அழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி) நடைபெற்றது.






கூடிய வருமானத்தை ஈட்டித் தரும் அழகுக்கலை  தொழிலை நேர்த்தியாகவும் ,சட்ட ரீதியாகவும் செயல்படுத்துவதற்கு கூட்டுறவு சங்கம் ஊடாக பதிவு செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில்

அழகுக்கலை தொழிலை மேம்படுத்துவதற்கு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

இந்த அழகுக்கலை தொழிலை மட்டக்களப்பு மாவட்டத்திலும்  மேம்படுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர்  தலைமையில் அழகுக்கலைக்கான அமைப்பு அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன .

இந்த அமைப்பின் ஊடாக சியானி அழகுக்கலை நிலையத்தால், படித்து விட்டு வேலைவாய்ப்பை  எதிர்பார்த்து இருக்கும்  இளைஞர்  யுவதிகளுக்கு அழகுக்கலை தொடர்பான  பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகளை நிறைவு செய்த இளைஞர்  யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.



மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் அழகுக்கலை ஆசிரியர் மரியதாஸ் சியாணி ராஜி தலைமையில் நடைபெற்ற சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கின் கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின தலைவர் (கனடா) ஜொகு, கௌரவ அதிதிகளாக  மட்டக்களப்பு கல்வியக் கல்லூரி  விரிவுரையாளர் ஏ.சிறிகரன், சட்டத்தரணி வி.சனுஜதாஸ் , ஆசிரியர் வை.மங்கள தர்சன் , மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக தலைவர் லயன் டி .தஜேந்திரகுமார், அங்கத்தவர் , என்.தர்சன்  மற்றும் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages