Breaking

Post Top Ad

Saturday, April 27, 2019

பம்பலப்பிட்டியில் சிக்கிய மர்ம வாகனம்! காட்டிக் கொடுத்த நாய்



பம்பலப்பிட்டியில் முக்கிய பகுதியில் வைத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பம்பலப்பிட்டியில் ஓஷன் டவர் கட்டட வாகனம் தரிப்பிடத்தில் மர்மமான மோட்டார் வாகனம் ஒன்று பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

விமானப்படை வெடிகுண்டு கண்கானிப்பு பிரிவு, மர்லி என்ற நாயுடன் குறித்த மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது மர்லி நாய் குறித்த மோட்டார் வாகனத்திற்கு அருகிலேயே நின்று தொடர்ந்து நாக்கால் நக்கியுள்ளது.

அதற்கமைய அந்த மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages