Breaking

Post Top Ad

Saturday, April 27, 2019

இலங்கையில் தற்கொலை தாக்குதலுக்கு முன் நடந்த ஒத்திகை! வெளியாகும் மர்மங்கள்

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இந்த ஒத்திகை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் 8 இடங்களில் தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றன.

குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமைகோரியிருந்தது. இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளர் கடந்த 18 ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages