Breaking

Post Top Ad

Tuesday, April 30, 2019

விடத்தல் தீவில் படையினர் கடும் சோதனை: டெட்டனேட்டர் குச்சிகளுடன் 4 பேர் கைது In இலங்கை



மன்னார், விடத்தல்  தீவு பகுதியில்  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கடும் சோதனை நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

விடத்தல் தீவு பகுதியில், நேற்று மாலை டெட்டனேட்டர் குச்சிகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.



இந்நிலையிலேயே முப்படையினர் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டுள்ளனர்.

வீடுகளுக்குச் சென்ற படையினர் வீடுகளை முழுமையாக சோதனையிட்டதோடு, வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் விடத்தல் தீவு கிராத்திலுள்ள பிரதான வீதிகளில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கைது செய்யப்பட்ட விடத்தல் தீவைச் சேர்ந்த 4 பேர், இராணுவத்தினரினால் அடம்பன் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் நகரிலுள்ள பல்வேறு கிராமங்களிலும் படையினர் இன்று காலை முதல் மதியம் வரை வீடு வீடாகச் சென்று கடும் சோதனைகளையும், தேடுதல்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நன்றி - ஆதவன்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages