Breaking

Post Top Ad

Tuesday, April 9, 2019

"நாட்டிற்காக ஒன்றிணைவோம்" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் "நாட்டிற்காக ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமை 08ஆம் திகதி பல வேலைத் திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.



சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இதன் பிரதான நிகழ்வாக, கல்லடி கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில்  நடைபெற்றது.

இந் நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக அலி சாஹிர் மௌலானா, ஜனாதிபதி செயலக நிருவாக பிரிவின் உயர் அதிகாரிகள், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், மாநகரசபை பிரதி ஆணையாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது கடற்கரை பிரதேசத்திலுள்ள பிளாஸ்டிக் போத்தல்கள், கண்ணாடிகள், குப்பைகள், வெற்று தகர டின்கள், உள்ளிட்ட பொருட்களை பொறுக்கி சுத்தம் செய்யப்பட்டது.


இந் நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உரையாற்றுகையில்,


அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட  ​​​​08் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட  வேலைத் திட்டம் எதிர்வரும் 12ம் திகதி  வௌ்ளிக்கிழமை  முடிவடையவுள்ளது.



எதிர்வரும் 12ம் திகதி எமது மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார். இதை முன்னிட்டு அன்றைய தினத்திலும் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இந்தக் காலகட்டங்களிலே எமது 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1115 வேலைத் திட்டங்கள் இடம்பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


அந்தவகையில் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டம், சிறுநீரக பாதுகாப்பு சுகாதார வேலைத் திட்டம், விவசாய வேலைத்திட்டம், ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களை மைபயப்படுத்தியதாக அனைத்து திணைக்களங்கள், அதிகாரசபைகள், சபைகள், அமைச்சுக்கள், கிகை்கு மாகாணசபை, உள்ளூராட்சி மன்றங்கள் போன்ற அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து இந்த வேலைத் திட்டங்களை நாங்கள் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்.


அதற்கமைவாக இன்று சுற்றாடலை பாதுகாக்கும் நோக்கில் பொது மக்களின் பங்களிப்புடன் எமது கல்லடி கடற்கரையினை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். இதேபோன்று ஏழு (07) பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடற்கரை சுத்தம் செய்யும் வேலைத்திட்டத்தை நாம் இன்று ஆரம்பித்துள்ளோாம்.


இந்த வேலைத்திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செயற்படவேன்டும் என நாந் இந்தவேளையில் கேட்டுக்கொள்கின்றேன். என தெரிவித்தார்.














No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages