Breaking

Post Top Ad

Sunday, March 3, 2019

மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்

மட்டக்களப்பு ஷேன்  பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்  பாடசாலை அதிபர் திலினி  குஷாந்த்  தலைமையில் மட்டக்களப்பு பாட்டாளிப்புரம் மைதானத்தில் சனிக்கிழமை 02ம் திகதி பிற்பகல்   நடைபெற்றது

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயல்பட்டு மகிழ்வோம் என்ற செயல்பாட்டின் கீழ் சிறார்களின் விளையாட்டு    நிகழ்வுகள்  இடம்பெற்றதுடன் ,வெற்றிப்பெற்ற சிறார்களுக்கு  பரிசில்களும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன 

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன்  , மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் மட்டக்களப்பு ஷேன்  பாலர் பாடசாலையின் பணிப்பாளர் கிறிஸ்டின் சுஜித் ,ஆகியோர்  கலந்துகொண்டனர் .

இவ் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பாடசாலை சிறார்கள் மற்றும் சிறார்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்










  

No comments:

Post a Comment

Pages