Breaking

Post Top Ad

Sunday, March 3, 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல்

விவசாயத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பாக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கலந்துரையாடல் சனிக்கிழமை 02ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது.

  
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில்  விவசாயத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பாகவும் , போட்டியிடும் உலகளாவிய சந்தையில் இலங்கை ஏற்றுமதிகளின் சரியான பங்கு, சூழலை உறுதிபடுத்தல் முகமாக நாடளாவிய ரீதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பாக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கலந்துரையாடல் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்  அலி சாஹி மௌலானா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது ,

இதன்போது திட்டங்களுக்கான நிதிப் பங்கீடு , விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் , அதேபோல் ., இயற்கை வளங்களை  பிரித்தெடுத்தல் மற்றும் சேகரித்தல் மற்றும் தயாரிப்புக்களை மாற்றியமைத்தல் போன்ற   விடயங்கள் கலந்துரையாடப்பட்டன


சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்  அலி சாஹி மௌலானா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழவில் ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் திட்ட பணிப்பாளர் ரோகன கமகே , மாவட்ட அரசாங்க அதிபர் .எம் .உதயகுமார் , மற்றும் ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் , பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள் , பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் அலுவலக உத்தியோகத்தர்கள் , அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் , விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர் 







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages