Breaking

Post Top Ad

Sunday, March 31, 2019

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்க சிட்னி கிளையினரால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு 16 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்க சிட்னி கிளையுடன் மற்றைய  கிளைகளும் இணைந்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு பெருந்தொகை விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 31 பாடசாலைகளுக்கு இவ் விளையாட்டு உபகரணங்கள் செவ்வாய்கிழமை (26ஆம் திகதி பிற்பகல் ) கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உடற்கல்வி துறையின் உதவிப் பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் , யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்க சிட்னி கிளையின் தலைவர் சுப்பிரமணியம் சுபதாசன், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள்,  உடற்கல்வி ஆலோசகர், ஆசிரியர்கள் மாணவர்கள்  என பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது வசதி குறைந்த 31 பாடசாலைகளுக்கு, சுமார் 16 இலட்சம் பெறுமதிமிக்க பாடசாலை விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
















No comments:

Post a Comment

Pages