Breaking

Post Top Ad

Monday, February 18, 2019

முதல் பந்தில் ஓட்டம் பெற்று சம்பியனானது செங்கலடி கோல்ட் ஸ்டார்



மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச மட்ட பெண்களுக்கான எல்லோ போட்டியில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் திருமதி கே.சங்கீதா தெரிவித்தார்.


ஏறாவூர்ப்பற்று பிரதேச மட்ட பெண்களுக்கான எல்லோ போட்டி ஞாயிற்றுக்கிழமை (17) செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் சவுக்கடி ஆதவன் விளையாட்டுக் கழகங்களுக்கிடையே இறுத்திப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற செங்கலடி கோல்ட் ஸ்டார் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சவுக்கடி ஆதவன் விளையாட்டுக் கழகம் 30 பந்துகளுக்கு எது வீத ஓட்டங்களையும் பெறவில்லை. பதிலுக்கு துடுபெடுத்தாடிய செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் முதல் பந்திலே ஓட்டத்தைப் பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages