Breaking

Post Top Ad

Tuesday, February 12, 2019

கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தால் மிக்கல் கல்லுரிக்கு கிரிக்கெட் உபகரனம் கையளிப்பு.



மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தினாரால் ஐந்து லட்சம் ரூபாய் பெருமதியான கிரிக்கெட் உபகரனங்களை பாடசாலை அதிபர் திரு.பயஸ் ஆனந்தராஜாவிடம் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் திரு.சிவநாதன் கையளித்தார்.


 மட்டகளப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதுடன் தேசிய மட்டத்தித்திற்கு வீரர்களை கொண்டு சேர்க்கும் நோக்குடன் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமம் 250 மில்லியன் ரூபாவில் செலவில் ஒரு சர்வதச மட்டத்திலான கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதை யாவரும் அறிந்த விடயம். இதன் முதற்கட்டமாக பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக  மட்டக்களப்பில் உள்ள பாடசாலைகளின் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்குடன்  மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரிக்கு ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான கிரிக்கெட்  உபகரணங்களை மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தினாரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு முன்னால் மட்டக்களப்பு கல்விப்பணிப்பாளர் திரு.பாஸ்கரன் வலய உடற்கல்வி பணிப்பாளர் திரு.லவக்குமார் புனித மிக்கல் கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் அருட்பணி ஸ்ரனிஸ்லாஸ் அடிகளார் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகளான திரு.ரஞ்சன் திரு.காசிப்பிள்ளை கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு.சடாற்சரராஜா  மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அங்கத்தவர்கள் மிக்கல் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முன்னால் மட்டக்களப்பு கல்விப்பணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் உரையாற்றுகையில் இப்படிப்பட்ட சர்வதேச தரத்திலான மைதானம் ஒன்றை ஒரு தனி அமைப்பான கோட்டைமுனை விளையாட்டு கிராமம் செயய முன் வந்ததை தன்னால் பாராட்டாமல் இருக்க முடியாது எனவும அத்;தோடு நின்று விடாமல் அதை செயற்படுத்த பாடசாலை மட்டத்தில் மாணவர்களை ஊக்குவிக்க அதிரடியாக கிரிக்கெட் உபகரணங்களை இன்று வழங்கி வைத்ததையும் தாம் பாராட்டுவதாக தெரிவித்தார் 

இம்மைதானத்திற்காக புலம்பெயர்ந்து வாழும் எம் நாட்டின் சொந்தங்கள் இப்பாரிய பணிக்கு உதவி செய்ய முன் வந்துள்ளதையும் இதற்கான பிரதிநிதியாக இங்கு வந்து இப்பணிகளை முன்னெடுக்கும் திரு.வசீகரன் அவர்களுக்கும் தம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதன் போது உரையாற்றிய கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் செயலாளர் திரு.அருள்மொழி அவர்கள் இவ்வமைப்பு விளையாட்டு கல்வி வாழ்வாதார என்பனவற்றை மேம்படுத்தும் ஒரு அமைப்பாக செயற்படவுள்ளதாகவும் முதற்கட்டமாக விளையாட்டை ஊக்குவிப்பதற்கான செயற்பாட்டையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இந்நிகழ்வினை புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தனரால் ஏற்பாடு செய்து நடாத்தபட்டதுடன் இதற்குரிய சகல விடயங்களையும் திரு.ஆதித்தியன் அவர்கள் மேற் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.









No comments:

Post a Comment

Pages