Breaking

Post Top Ad

Wednesday, February 6, 2019

சிசிரிவி கமெராவை அகற்றி, பணம், நகைகள் திருடிச் சென்ற சந்தேக நபர்களில் ஒருவர் கைது


வீட்டைக் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெரா உள்ளிட்ட அதன் உபகரணங்களை அகற்றியதோடு பணம் மற்றும் தங்க நகைகள் என்பனவற்றை வீட்டிலிருந்து திருடிச் சென்ற சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.



வாழைச்சேனை பொலிஸ்  குற்றத் தடுப்புப் பொறுப்பதிகாரி எஸ்.ஏ. பண்டார மற்றும் பொலிஸ் சிரேஷ்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையில் நடவடிக்கையில் இறங்கிய பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்தனர்.

தகவலொன்றில் அடிப்படையில் புதன்கிழமை 06.02.2019 இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது வாழைச்சேனையில் வைத்து 23 வயதான இளைஞனொருவன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயதான இன்னுமொரு சந்தே நபர் தேடப்பட்டு வருவதாகவும் கூறினர்.

சந்தேக நபர் கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து சம்பவம் நடந்த வீட்டில் திருடப்பட்ட சிசிரிவி கமெராவின் சில உதிரிப் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் அவ்வீட்டில் திருடப்பட்டதாக முறையிடப்பட்ட சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணம் குறித்தும் தங்க ஆபரணங்கள் குறித்தும் பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருடப்பட்ட சிசிரிவி கமெராவும் அதன் இணைப் பாகங்களும் சுமார் 62 ஆயிரம் ரூபாய் பெறுமதியானது என முறையிடப்பட்டிருந்தது. அத்துடன் 2 பவுண் தங்க நகைகளும் 60 ஆயிரம் ரூபாய் பணமும்  திருடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்;கப்பட்டதன் அடிப்படையில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Pages