Breaking

Post Top Ad

Saturday, February 9, 2019

ஜனாதிபதி சிறிசேனவின் எண்ணத்தில் உருவான கிராம சக்தி கிராம எழுச்சி வேலைத் திட்டம் - மட்டக்களப்புல்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எண்ணத்தில் உருவான கிராம சக்தி கிராம எழுச்சி வேலைத் திட்டத்தின் கீழ் மாவாட்ட ரீதியாக கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு கிராம சக்தி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


கிழக்கு மாகாணத்திற்கான கிராம சக்தி நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவு செய்யப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான் கிராமம்  தெரிவு செய்யப்பட்டு கிராம சக்தி நிகழ்ச்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட சத்துருக்கொண்டான் கிராமத்தை எதிர் வரும் எட்டாம் திகதி ஜனாதிபதி பார்வையிடவுள்ளார்
மட்டக்களப்பு மாவட்டத்த்ற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்கும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக அரச திணைக்கள அதிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது 

இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கிராம சக்தி பணிப்பாளர் சி டி .களுவாரச்சி, அம்பாறை, மட்டக்களப்பு இதிருகோணமலை ஆகிய மாவட்ட அரசாங்க அதிபர்கள் இஜனாதிபதியின்  மேலதிக செயலாளர் .சி பல்லேகம . ஜனாதிபதி செயலக மாவட்ட இனைப்பாளர் வைத்தியர் கோல்டன் பெர்னாண்டோ . கிராம சக்தி பிரதி பணிப்பாளர் திருமதி சாந்தணி ரணசிங்க . கிழக்கு மாகாண பிரதம திட்டமிடல் பணிப்பாளர் இஎன் தமிழ் செல்வன் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு இதிருகோணமலை அரச திணைக்கள அதிகாரிகள் இபாதுகாப்பு படையினர் கலந்துகொண்டனர் 

































No comments:

Post a Comment

Pages