Breaking

Post Top Ad

Wednesday, February 6, 2019

யாழில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு; மூவர் சிக்கினர்!



யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியிலுள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து 17 பவுண் தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையில் திருடப்பட்ட 14 பவுண் தங்கமும் மீட்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் சிறப்பு பொலிஸ் பிரிவினரால் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

“யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 25ஆம் திகதி பட்டப்பகலில் உடைத்து வீட்டினுல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.

வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் பணிக்குச் சென்றிருந்த நிலையிலும் பிள்ளைகள் மூவரும் பாடசாலைக்குச் சென்றிருந்ததால் அங்கு எவருமே இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் சிறப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அந்த வீட்டுக்கு அண்மையாக உள்ள சீசீரிவி கமராவில் திருடர்கள் மூவரும் நடந்து செல்வது பதிவாகியிருந்த்தது. அதில் அடையாளம் காணப்பட்ட இளைஞர்கள் இருவர், நாவற்குழி பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் 17 வயதையும் மற்றையவர் 22 வயதையும் உடையவர்.

அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குருநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டார். விசாரணைகளில் கிடைத்த தகவலில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகை வியாபாரியிடமிருந்து உருக்கப்பட்ட நிலையில் தங்கம் மீட்கப்பட்டது.

மேலும் மற்றொரு தங்க ஆபரணம் ஒன்று போதைப்பொருளுக்காக கைமாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages