Breaking

Post Top Ad

Friday, February 1, 2019

கிண்ணியா சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விஜயம் - தலா ஐம்பதாயிரம் ரூபா அன்பளிப்பு


கடந்த இரு தினங்களுக்கு  முன்பு கிண்ணியாவில் மண் அகழ்வின் போது  உயிரிழந்த  இருவரது வீடுகளுக்கு கலாநிதி எம் .எல் .எ. எம்  ஹிஸ்புல்லாஹ் விஜயம் செய்து , இரு சகோதர்களின் குடும்பத்திற்கு மாகாண நிதியில் இருந்து  தலா ஐம்பது ஆயிரம் ரூபா காசோலை  வழங்கிவைத்தார் .


இன்று (31.01.2019) விஜயம் செய்த கிழக்கு ஆளுநர் இந்த அன்பளிப்பினை வழங்கிவைத்தார் . இதன் போது இவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் வழங்கினார் . 


இதன் போது அங்கிருந்த பொதுமக்கள் மண் அகழ்வது , மரங்கள் வெட்டுதல் போன்றவை எங்களது வாழ்வாதார தொழில் எனவும் அதை சட்டரீதியாக செய்வதறகு அனுமதியை பெற்று தருமாறு ஆளுநரிடம்  கோரிக்கை விடுத்தனர் . இதற்கு பதிலளித்த கிழக்கு ஆளுநர் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம்  கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் .



இதன் போது கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் , பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment

Pages