Breaking

Post Top Ad

Thursday, February 7, 2019

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மகளிர் அபிவிருத்தி தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் ,விற்பனையும்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மகளிர்  அபிவிருத்தி தையல் பயிற்சியாளர்களின்  பொருட்களின் கண்காட்சியும் ,விற்பனையும்  மட்டக்களப்பில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆண்டு தோறும் படித்துவிட்டு  வேலையற்று இருக்கின்ற யுவதிகளுக்கு ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது .

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை  நிறைவு செய்துகொண்டு  வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட  பொருட்களின்  கண்காட்சியும் ,   மட்டக்களப்பு  ஜெயந்திபுராம் வாசிகசாலை கட்டத்தில் இன்று  நடைபெற்றது .
மண்முனை வடக்கு தையல் பயிற்சிகளுக்கான போதனாசிரியை , சிரேஷ்ட தையல் போதனாசிரியர்  திருமதி  என் . ரவிச்சந்திரன்   ஒழுங்கமைப்பில் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .மாலதி மகேஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது .

இந்நிகழ்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம் .தயாபரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து  வைத்தார் .
இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  கே .மோகன் பிறேம்குமார்  ,இருதயபுரம் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி . சுகந்தினி ஜெகதர்சன் , கிராம அபிவிருத்தி உத்தியோக்கத்தார் மற்றும் ஜெயந்திபுரம் ,வீச்சுக்கல்முனை ,மாஞ்சந்தொடுவாய் , கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் , ஜெயந்திபுரம்  கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்  , மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் 2018 ,2019 பயிற்சி மாணவிகள் கலந்துகொண்டனர் .   










No comments:

Post a Comment

Pages