Breaking

Post Top Ad

Wednesday, February 13, 2019

​பொருளாதாரத்தை மேம்படுத்த பயனாளிகள் நாட்டுக்கோழி குஞ்சிகள் வழங்கும் திட்டம்



பயனாளிகள் நாட்டுக்கோழி குஞ்சிகள்  வழங்கும் நிகழ்வு   மட்டக்களப்பு வவுணதீவில் நடைபெற்றது

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் உள்ள  சிறார்களின் போசாக்கு தன்மையை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் போசாக்கு குறைபாடுள்ள பிள்ளைகளின் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு கோழி வளர்ப்பு திட்டத்திற்கான  கோழி குஞ்சுகள்  வழங்கும் நிகழ்வு  வவுணதீவு  அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில்  நடைபெற்றது 


வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்ப சிறுவர்களின் போசாக்கு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் பிள்ளைகளின் போசாக்கு  மேம்படுத்தும்  அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது 
வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால்  வவுணதீவு பிரதேச செயலக பிரிவில்  வவுணதீவு , கன்னங்குடா , மண்டபத்தடி , கொத்தியாபுலை ,நாவல் தோட்டம் ,வாளக்காலை,சின்ன காள போட்ட மடு ,பொன்னாங்காணி  தோட்டம்  சரஸ்வதி பாலர் பாடசாலை சிறார்களின் கல்வி செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களும் மற்றும் வவுணதீவு கொத்தியாபுலை  கிராமத்தில் போசாக்கு குறைபாடுள்ள  சிறார்களின் போசாக்கை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு வீட்டுதோட்ட பயிர்ச் செய்கைக்கான கூட்டுப்பசளை தயாரிக்கும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது 

வவுணதீவு கொத்தியாபுலை சரஸ்வதி பாலர் பாடசாலை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  திருமதி . சுபா சதாகரன் , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர்  திருமதி . நிலக்ஷி தவராஜா , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட இணைப்பாளர் மாரி இவாஞ்சலின் , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் கே .யசோதரன் ,வவுணதீவு கொத்தியாபுலை சரஸ்வதி பாலர் பாடசாலை ,ஆசிரியர்கள் . பயனாளிகள் கலந்துகொண்டனர்  











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages