Breaking

Post Top Ad

Thursday, February 7, 2019

மட்டக்களப்பில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு விளக்கமறியல்



மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலையை குழப்புவதற்கு அழைப்பு விடுத்து செயற்பட்டு வந்த நிலையில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாகி இருந்து பின்னர் நீதிமன்றில் ஆஜரான மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் (தியேட்டர் மோகன்) என்பவரை பெப்ரவரி 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை 06.02.2019 உத்தரவிட்டது.
மேலும்,
 அண்மையில் இடம்பெற்ற ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து மட்டக்களப்பு பிரதேசத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகித்தமை போன்றவற்றிக்கு தெரடர்புபட்ட   ஏனையவர்களை  நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.

மட்டக்களப்பு பெரியபுல்லுமலையில் அமைக்கப்பட்டு வந்த போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த 07.09.2018 அன்று ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages