Breaking

Post Top Ad

Saturday, February 2, 2019

மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான பூப்பந்தாட்டப் சுற்றுப் போட்டி

மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஆரம்பமான பூப்பந்தாட்டப் சுற்றுப் போட்டி (2019 ) மட்டக்களப்பில்   இன்று 02ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமானது .

சம்மேளனத்தின் தலைவர் இராஜேந்திரா தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ;ஞா.ஶ்ரீநேசன் கலந்து சிறப்பித்தார்.


மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன், மாவட்ட  இளைஞர் சேவைகள் அதிகாரி திருமதி. என்.அருள்மொழி, தினோஷிதா கட்டுமான நிறுவன பணிப்பாளர் ஆர் பேரின்பராஜா போன்றோரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இப் போட்டயானது மூன்று (03) நாட்கள் கொண்டதாக திட்டமிடப்பட்டு இப் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.



















No comments:

Post a Comment

Pages