Breaking

Post Top Ad

Tuesday, February 12, 2019

சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு ஊடாக மாடி கட்டடத் தொகுதிக்கான அடிகள் நாட்டும் நிகழ்வு



நாடளாவிய ரீதியில்  உள்ள வைத்தியசாலைகளுக்கு சீன அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள  13  மூன்று மாடி கட்டடத் தொகுதிக்கான அடிகள் நாட்டும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றனர்
இதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வுகள்  சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித  சேனாரத்ன   தலைமையி;ல் இடம்பெற்று வருகின்றன


இதன் கீழ் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்  மற்றும் சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் சீன அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் 234 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் ஏறாவூர் தள வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள நவீன வசதிகளை உள்ளடக்கிய மூன்று மாடிக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு  மட்டக்களப்பு ஏறாவூர் நடைபெற்றது .

இந்நிகழ்வில் சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்  ராஜித  சேனாரத்ன   , சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் , முன்னாள் கிழக்கு மாகான முதலமைச்சர் நசீர் அகமட் மாவட்ட அரசானாக அதிபர் எம் .உதயகுமார் , ஏறாவூர் நகர சபை தவிசாளர் ஜெ எ . வாஸித் அலி ,.மாகான சபை , உள்ளூராட்சி , அரசியல்  பிரமுகர்கள் , சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் ,திணைக்கள தலைவர்கள் ,வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர் 










No comments:

Post a Comment

Pages