Breaking

Post Top Ad

Thursday, February 7, 2019

செங்கலடியில் கடமை நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டம்.



மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலக ஊழியர்கள்  புதன்கிழமை (06) பிற்பகல் கடமை நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.

பிரதேச செயலகத்திற்கு முன்பாக இக்கவனயீ;ப்புப் போராட்டம் நடைபெற்றது.

சட்டவிரோதமாக மணல் அகழ்வதற்கு பிரதேச செயலாளர் துணைபோவதாகவும் அரசாங்க காணிகளை    சட்டவிரோதமாக பகிர்ந்தளிப்பதாகவும் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வலைத்தளம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்து   இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  சுலோகங்களையும் ஏந்திநின்றனர்.


ஊடக சுதந்திரத்தை வரவேற்கின்றோம்; ஆனால் ஊடகங்கள் தகவல்களை உறுதிப்படுத்தி பின்னர் வெளியிடவேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.









No comments:

Post a Comment

Pages