Breaking

Post Top Ad

Friday, February 1, 2019

துர்வாடை வீசும் ஓட்டமாவடியின் நுழைவாயில் : தவிசாளரின் அசமந்தப்போக்கு - ஆளுனரின் கவனத்திற்கு...கிழக்கு மாகாணத்தின் நுழைவாயில் என அழைக்கப்படும் மட்டக்களப்பு-ஓட்டமாவடிப்பாலத்தை அண்மித்த கொழும்பு பிரதான வீதியின் ஆற்றங்கரையை ஒட்டியதாகக் காணப்படும் பிரதேசத்தின் நிலைமையே இது.


குப்பைகள் நிறைந்தும் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாட்டுக்கழிவுகள் நிறைந்தும் துர்வாடை வீசும் பிரதேசமாக காணப்படுகின்றது. தூரப்பயணங்களிலிருந்து வருவோர் இந்த துர்வாடை வீசுவதை வைத்தே நாம் ஓட்டமாவடி பிரதேசமூடாகப் பயணிக்கிறோம் என்ற மனோநிலையில் பயணிக்கும் நிலையும் விமர்சிக்கின்ற சூழலும் காணப்படுகிறது.

பாதுகாக்கப்பட வேண்டிய, சுத்தம் பேணப்பட வேண்டிய இப்பகுதியில் பிளாஸ்டிக்இ பொலித்தீன் மிருகங்களின் எச்சங்கள் குப்பை கூளங்கள் என சுற்றாடலைப் பாதிக்குமளவுக்கு துர்நாற்றம் வீசும் பிரதேசமாக காணப்படுகின்ற நிலை மாற்றப்பட வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாகும்.

உலகின் புகழ்பெற்ற பாசிக்குடா கடற்கரை சுற்றுலாத்தளம் அமைந்திருக்கும் வாழைச்சேனை கல்குடாப் பிரதேசத்திற்கு இவ்வழியாக ஐந்து கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியிருக்கும். உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பலர் பிரதானமாகப் பயன்படுத்தும் குறித்த ஓட்டமாவடிப் பாலத்திற்கு அருகாமையில் காணப்படும் இப்பிரதேசம், நீண்டு செல்லும் ஆற்றங்கரை அண்டியதாக பாதுகாக்கப்பட வேண்டிய கண்டல் தாவரங்கள் அதிகமாகக் காணப்படுகிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரப்பகுதி என்பதால், தவிசாளருக்கு சுட்டிக்காட்டியும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியில் அமையப்பெற்றிருக்கும் வீதியின் அருகாமையில் காணப்படும் இப்பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினையைக்கூட கணக்கிலெடுக்காத தவிசாளர், எவ்வாறு மூலை முடுக்குகளில் காணப்படுகின்ற குறைபாடுகளைக் கணக்கிலெடுப்பார் என்ற கேள்வி சாதாரண இப்பிரதேச சபைக்கு வரி செலுத்தும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எழுகின்றது.

இலங்கையின் கிழக்கு மாகாணமென்பது சுற்றுலாத்துறைக்கு அதிகம் பங்களிப்புச்செய்யும் முக்கிய கேந்திர நிலையங்களில் ஒன்றாகும். அதிலும் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டம் மிகப்பிரதான இயற்கை வளங்களையும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் முக்கிய பிரதேசங்களிலொன்றாகத் திகழ்கின்றது. சுற்றுலாத்துறை எமது நாட்டின் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் துறையாகும்.

ஓட்டமாவடியில் 1922ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கருப்புப்பாலமும் இங்கு காணப்படுவதுடன், நூறு வருடங்களைப்பூர்த்தி செய்த சிறப்புமிக்க ஓட்டமாவடி தேசிய பாடசாலையும் இப்பிரதேசத்தில் காணப்படுகிறது.

இவ்வாறு வரலாற்றுப் பாரம்பரியங்களைக்கொண்ட இப்பிரதேசத்தை தனது அதிகார மமதையால் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கின்றார். ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளருக்கு இவ்விடயங்கள் தொடர்பில் நாம் பலமுறை சுட்டிக்காட்டியும் எவ்விதமான நடவடிக்கைகளும் அவரால் மேற்கொள்ளப்படவில்லை. என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்பும் இந்த மண்ணில் பிறந்தவன் என்ற வகையில் ஒரு ஊடகவியலாளனாக நாம் இப்பிரச்சினைகளை அவரின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்ற சந்தர்ப்பத்தில், அதனைத்தாம் ஏற்றுக்கொள்வது போலவும், தீர்வு பெற்றுத்தருவது போலவும் பாசாங்கு செய்வார்.


இவ்விடயத்தை இச்செய்தியினூடாக குறிப்பிடுவதன் நோக்கம், மேற்குறித்த பிரச்சினையைப்போல பல பிரச்சினைகள் ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகிறது. இதனைச்சுட்டிக் காட்டுகின்ற சந்தர்ப்பத்தில் தவிசாளர் எம்மோடு அடிக்கடி முரண்பட்டுக் கொள்கின்றார் என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே நாம் இதனைத்தருகின்றோம்.

ஓட்டமாவடி பாலத்தை அண்மித்த இப்பகுதி பல வருடங்களுக்கு முன்பு இந்நிலைமையிலேயே மிக மோசமாகவே காணப்பட்டது. இது தொடர்பில் அன்று கவனஞ்செலுத்திய விவசாயம்இ நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்கள் அழகிய மீன் சந்தைக் கட்டடத்தொகுதியொன்றினை இப்பிரதேசத்தில் அமைத்துக் கொடுத்திருந்தார்.

இதன் மூலம் இப்பிரதேசம் அழகுபடுத்தப்பட்டது. மீனவர்கள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாரியளவில் இது பங்களிப்புச் செய்து வருகின்றது.

பிரதேச ஊடகவியலளர்
ஓட்டமாவடி


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages