Breaking

Post Top Ad

Wednesday, February 13, 2019

மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படாமை ஒரு ஜனநாயக உரிமை மீறலாகும்.



மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடாத்த ஜனாதிபதி மாத்திரமே தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.- ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டு மாவட்டஅமைப்பாளர் ஜீ.ஹரிதரன்


மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் (ஒரு வருடம் கடந்த பின்னரும்) நடாத்தப்படாமை ஒரு ஜனநாயக உரிமை மீறலாகும். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகளும் இந்த மாகாண சபைத் தேர்தலை நடாத்த ஐக்கிய தேசிய கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதில்லை ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை காப்பாற்றுவதற்காக நீதிமன்றம் வரை செல்வார்கள். இதுவொரு ஜனநாயக உரிமை மீறலென அவர்களுக்கு தெரியாதா இருப்பினும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென ஜனாதிபதி மாத்திரமே தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

கிழக்கு மாகாணத்தின் சிவில் அமைப்புக்கள் இளைஞர்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டு மென்பதில் ஆர்வமாக உள்ளனர். எனவே இத்  தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி அரசியல் உரிமை மக்களின் பாதுகாப்பு மற்றும் கிராம மட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி ஆர்வமாகவுள்ளார் அதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எடுக்கவுள்ளார். எனவே அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு மக்களுக்கு பணியாற்ற முன்வர வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஜீ.ஹரிதரன் இன்று அவரது அலுவலுகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.




No comments:

Post a Comment

Pages