Breaking

Post Top Ad

Sunday, February 10, 2019

ஊருக்குள் நுழைந்த முதலை குட்டியை பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்மக்கள்



ஊருக்குள் நுழைந்த முதலை குட்டி ஒன்றினை அப் பிரதேச மக்கள் மடக்கி பிடித்த சம்பவம் மட்டக்களப்பில்  வௌ்ளிக்கிழமை 08ஆம் திகதி இடம்பெற்றுள்ளது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு, அமிர்தகழி கிராமத்தில் மாணிக்கப்பிள்ளையார் வீதி பகுதியில் வீட்டு வளாகத்திற்குள் புகுந்த சுமார் மூன்று அடி நீளமுள்ள முதலை குட்டி ஒன்றை அப்பகுதி மக்கள்  மடக்கிப் பிடித்து வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.


பொதுமக்களால் பிடிக்கப்பட்ட முதலைக்குட்டி தொடர்பாக மட்டக்களப்பு  வனஜீவராசி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து  குறித்த இடத்திற்கு வருகைதந்த வணஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் முதலை குட்டியை பாதுகாப்பான முறையில் விடுவிப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்






No comments:

Post a Comment

Pages