Breaking

Post Top Ad

Thursday, February 14, 2019

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடல்



எதிர்வரும் 24 ஆம் திகதி பேசில் ராஜபக்ச  மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி .சந்திரகுமார் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய இணைப்பாளர் எஸ் .அமரசிங்க தலைமையில் மட்டக்களப்பு இருதயபுரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே , கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமால்  லன்சா, பொலநறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர் 

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாகாணசபை மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் காலங்களில் மாவட்ட ரீதியாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட  அலுவலகம் திறப்பது தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல்களும் , மாவட்ட மட்டத்தில் கட்சியில் அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன 
.
மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி .சந்திரகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின்  தலைவர்கள் ,மாவட்ட  ஒருங்கிணைப்பு   அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கட்சி ஆதரவாளர்கள் ,அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்















No comments:

Post a Comment

Pages