Breaking

Post Top Ad

Sunday, February 10, 2019

பங்கதவாத தடை சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள பங்கவாத எதிர்ப்புச் சட்டத்தை நாங்கள் எற்றுக்கொள்ளமாட்டோம்



பங்கதவாத தடை சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள பங்கவாத எதிர்ப்புச் சட்டத்தை திருத்தமின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் இடமளிக்கமாட்டாது என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு தன்னிச்சையாக செயற்படும் வகையில் உருவாக்கப்படுகின்ற இச்சட்டத்திற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க  முடியாது என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் பன்முப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட  33 இளைஞர் கழகங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (09) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலெயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கந்தையா அழகுராஜா  பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  அ.கருணாகரன், கணக்காளர் ஜோர்ஜ் அன்டனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் - இந்த நாட்டிலே நீண்டகாலமாக இருந்துவந்த பயங்கரவாத தடைச்சட்டம் எமது மக்களை அச்சுறுத்தியது. வடகிழக்கில் வாழும் எமது உறவுகள் இந்த சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை அந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் நிலையை உணர்ந்து இதனை நீக்கவேண்டுமென  அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தது.

 இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும்  போர்வையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது.

 தற்போதைய சூழ்நிலையில் பொலிஸார் சட்டத்திற்கு முரணாக பல செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பொலிஸார் அப்பாவிகளைக்கூட கைதுசெய்து சித்திரவதைக்குட்படுத்துவதைத் தடுக்க முடியாது.

 எனவே, இந்தச் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரும்போது நாங்கள் எதிர்க்க உள்ளோம். இச்சட்டத்தின் விளைவுகள் பற்றி சட்ட வல்லுனர்கள் தற்போது மக்களுக்கு தெளிவுபடுத்திவருகின்றனர்.

 உலநாடுகளில் 'பயங்கரவாதிகள்' என்ற சொற்பதம்; கூடுதலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. 'தீவிரவாதம்' என்ற பதத்தினையே பயன்படுத்தகிறார்கள். ஆனால் இலங்கையில் பயங்கரவாதிகள் என்ற சொல்லினை பயன்படுத்துகிறார்கள்.

 பயங்கரவாதம் என்ற செல்லினை கொண்டுவந்து பங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தினை ஜனநாயகத்திற்கு முரணான வகையில் எமது மக்களை பாதிக்கச்செய்து கைதுசெய்து சித்திரவதை, தடுத்து வைத்தல் நடைபெறுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். 

 தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை மாத்திரமே விமர்சனம் செய்கிறார்கள். அரசாங்கத்தை விமர்சிப்பதில்லை. புதிய அரசாங்கம் உருவாகுவதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் ஏன் அமைச்சுப் பதவிகளை பெற்று எமது மக்களுக்கு சேவையாற்ற முடியாது என கேள்விகேட்கிறார்கள்.

 ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எமக்கு அமைச்சுப் பதவிகளைப் தருவதற்கு தற்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் எமது மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெறுவதற்காக எமக்கு ஆணை வழங்கவில்லை. அமைச்சுக்கள் தேவை என்றால் தேசிய கட்சிகளில் போட்டியிட்ட தமிழர்களுக்கு வாக்களித்திருப்பார்கள்.

 தமிழ் மக்கள் இழந்த உரிமையை மீண்டும் பெற்று இந்த நாட்டிலே தேசிய இனம் என்ற ரீதியில் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்ற குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் என்ற நம்பிக்கையில் ஆணை வழங்கினார்கள். அந்த ஆணையை நாங்கள் ஒருபோதும் துஷ்ப்பிரயோகம் செய்ய மாட்டோம்.

 நக்குண்டார் நாவிழந்தார் என்ற நிலை தமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடாது. எமது மக்களின் அபிலாசைகள் நிறைவேறும்வரை நாங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டோம். ஆனால் அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த வகையில் எமது மக்களுக்கான அபிவிருத்திகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தருவோம் என்றார்.






No comments:

Post a Comment

Pages