Breaking

Post Top Ad

Saturday, February 16, 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற காணி பிரச்சினைகள் தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல்



மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற காணி பிரச்சினைகள் தொடர்பான உயர் மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ்  துரித செயலணி அமைக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள காணி பிரச்சினைகளை ஆராய்வதற்கான மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபர் தலைமையிலும் ,தேசிய மட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர்  தலைமையிலும் குழு நியமிக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களுடைய  காணிகள் , வன இலகா திணைக்களம் ,  மேச்சல் தரைகள் ,தொல்பொருள்  ஆராச்சி நிலங்கள் மற்றும் அரச காணிகளை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க தலைமையிலான குழு அமைக்கப்பட்டு மாவட்டத்தில் நிலவுகின்ற காணி பிரச்சினைகள் மற்றும் காணிகள் விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய  கிழக்கு மாகாண ஆளுநர்  மாவட்ட ரீதியில் நிலவுகின்ற காணி பிரச்சினைகள் மற்றும் காணிகள் விடுவிப்பது தொடர்பாக மாவட்ட உயர் மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் எ எம்  ஹிஸ்புல்லா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற உயர் மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் , அலி சாஹிர் மௌலானா , விவசாய ,நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம் எஸ் எம் .அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா .ஸ்ரீ நேசன் , எஸ் . யோகேஸ்வரன் ,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  சுதர்சனி  ஸ்ரீகாந்த் ,மாவட்ட  காணி மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்சனி முகுந்தன் ,மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ் வரன் ,மற்றும் மாவட்ட வன இலகா திணைக்கள அதிகாரிகள் , தொல்பொருள்  ஆராச்சி திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டனர்









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages