Breaking

Post Top Ad

Sunday, February 10, 2019

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இருதயபுரம் ஊடாக மாற்றுப் பிரதான பாதை...


புகையிரத நிலைய ஒழுங்கையினை அகலமாக்கி புனரமைக்கவும் ஏற்பாடு...


மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் வீதி விபத்துக்கள், உயிரிழப்புகள் என்பவற்றைக் குறைக்கும் வகையிலான மாற்றுப் போக்குவரத்து தொடர்பான முதல்வரின் முன்மொழிவானது மாநகரசபையின் 15வது அமர்வில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைவாக திருமலை வீதியூடாக கல்முனைக்குப் பயணிக்கும் வாகனங்கள் ஊறணி சந்தியினூடாகத் திருப்பப்பட்டு இருதயபுரம், கள்ளியன்காடு, புகையிரத நிலைய ஒழுங்கை, கல்லடிப் பாலத்தினூடாகச் சென்றடையும் வகையில் முன்மொழிவானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தவகையில் குறித்த வீதிகளை இரட்டை வழிப் பிரதான போக்குவரத்துப் பாதையாகப் புனரமைக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டமாக மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியையும், எல்லை வீதியையும் இணைக்கின்ற புகையிரத நிலைய ஒழுங்கையினை அகலமாக்கி புனரமைப்பதற்காக மாநகர முதல்வரினால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, அது சபை உறுப்பினர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பாதை புனரமைப்பு பணிகளுக்காக சுமார் 05 மில்லியன் ரூபாய்வரை மதீப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages