Breaking

Post Top Ad

Saturday, February 16, 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசார்பற்ற நிறுவனங்களினால் 2019 ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்



மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களினால் 2019  ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் சனிக்கிழமை 16ஆம் திகதி  மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு மாவட்ட செயலகத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக செயல்படுகின்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் 2019  ஆண்டில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கும், 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பான முன்நேற்ற செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலாகவும் இக் கலந்துரையபடல் அமைந்திருந்தது.

 இதன்போது 2018  ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவடத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள்  மற்றும் அதனுடன் தொடபுடைய  நிகழ்ச்சி திட்டங்களின் அறிக்கைகளும் ஆவண காட்சிப்படுத்தல்களும் இங்கு வௌியிடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி , ,மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ .நவேஸ்வரன், மாவட்ட அரச திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின்   பணிப்பாளர்கள், பிரதிநிதிகள்  என பலர் கலந்துகொண்டனர் 







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages