Breaking

Post Top Ad

Wednesday, February 6, 2019

2019 ஆண்டிற்கான சமூக பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் அங்குராப்பணம்

மட்டக்களப்பு அம்கோர் நிறுவனத்தின் 2019 ஆண்டிற்கான சமூக பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் அங்குராப்பணம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னேடுத்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் அம்கோர் தன்னார்வ தொண்டு நிறுவனமானது 2019 ஆண்டிற்கான தனது சமூக பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வினை இன்று மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம. உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது. 


அதிகரித்தது வருகின்ற பணத்தேவை மற்றும் தேவையற்ற கடன் சுமைகளிலிருந்து மக்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் 2019 ஆண்டிற்கான SHIELD எனும் திட்டமானது வாழைச்சேனை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 06 கிராமங்களில் நடைமுறைபடுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினூடாக தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களாக அமைக்கப்பட்டு அவர்களுக்கு சேமிப்பு பழக்கம், திறன் மேம்பாட்டு செயற்பாடுகள் மற்றும் வியாபார உதவித்திட்டங்களும் வழங்கப்படும். 

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்  M. உதயகுமார் , மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ் வரன் ,திட்டமிடல் பணிப்பாளர் திருமதி புண்ணியமூர்த்தி அம்கோர் நிறுவனத்தின் நிறுவனர் திரு ப. முரளிதரன் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு யோ. சிவயோகராஜன் மற்றும் பிரதேச செயலாளர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் அம்கோர் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

சரியான அபிவிருத்தி என்பது மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களையும் அபிவிருத்திக்கான பங்காளர்களாக மாற்றுவதாகும். அந்த வகையில் அம்கோர் நிறுவனமானது மக்கள் மற்றும் குடும்பங்களுக்கிடையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றமை பாராட்டக்கூடிய விடயம்  என  அரசாங்க அதிபர் தனது கருத்துரையில் குறிப்பிட்டார். 









No comments:

Post a Comment

Pages