Breaking

Post Top Ad

Tuesday, January 22, 2019

யுனிசெப் அனுசரணையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் நகரை அழகுபடுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்



மட்டக்களப்பு மாநகர சபையினால் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளை அழகு படுத்தும்  வகையில்  அலங்கார மரங்களை நடும் செயற்றிட்டம்  ஆரம்பிக்கப்பட்டது.



மட்டக்களப்பு மாநகர சபையின்  நகரை அழகுபடுத்தும்   ஓர் செயற்பாடாக  இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு பார் வீதியில் பொக்ஸ்வேகன்,கிறிஸ்டினா, போகன் விலா போன்ற மரங்களை நடும் நடவடிக்கைகள்  இடம்பெற்றது.

யுனிசெப்  நிறுவனத்தின்  நிதி அனுசரணையில்  சிறுவர்  நிதியத்தின்  கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும்  இத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில்  மாநகரபிரதி முதல்வர்  க.சத்தியசீலன்,  பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன்,  மட்டக்களப்பு பொதுமக்களுக்கான  பொலிஸ் தொடர்பாடல் அதிகாரி இலங்கரத்ன ,யுனிசெப் மற்றும் சிறுவர் நிதியத்தின் உத்தியோகத்தர்கள் , பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மரங்களை நட்டுவைத்தனர்.  

















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages