
பாடசாலை மாணவி மற்றும் குறித்த சந்தேகநபருக்கிடையில் நேற்று (13) இரவு ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாகவே, இவ்வாறு தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த மாணவியின் வீட்டாருக்கும் அயல் வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையின் காரணமாக மாணவியின் வலது கை துண்டாக வெட்டபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொட்டகலை பிரதேச பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் 18 வயதுடைய மாணவி ஒருவரின் கையே இவ்வாறு துண்டாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் டிக்ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவியை, மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் மாணவியின் கையை வெட்டிய சந்தேக நபரின் வீட்டை உடைத்து சேதமாக்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.