மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிட்குட்படட தாண்டவன்வெளி பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 2 பாடசாலை மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் இவ் மாணவிகள் வீதியை கடக்க முயன்ற சமயம் மட்டு நகரை நோக்கி வந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததனால் சாரதியால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
காயமடைந்த மாணவிகள் உடனடியாக மட்டக்களப்ப போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டனர். காரின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு ள்ளதுடன் மட்டக்களப்பு பொலிசார் இடம்பெற்ற விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.