Breaking

Post Top Ad

Friday, January 18, 2019

மட்டக்களப்பு - கரவெட்டியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 102ஆவது பிறந்தநாள் விழா!

( எஸ்.சதீஸ் )     

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள கரவெட்டியில், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 102ஆவது பிறந்தநாள் விழாவும் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் இரண்டாவது அண்டு நிறைவு நிகழ்வும் வியாழக்கிழமை 17ஆம் திகதி பிற்பகல் மிக கோலாகலமாக நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் வேலாப்போடி கெங்காதரம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.தங்கத்துரை, உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.



பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜி ராமச்சந்திரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வின்போது நற்பிரஜைகள் கௌரவிக்கப்பட்டதுடன், கடந்த 2018 இல் ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 100 பேருக்கும், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கசை; சேர்ந்த 50 பெண்களுக்கும் மன்றத்தால் ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டது.

































No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages