Breaking

Post Top Ad

Sunday, January 13, 2019

கிளிநொச்சியில் வெள்ளப்பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நாமல் MP விஜயம்!


கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் வழங்கி வைத்துள்ளனர்.


குறித்த குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்க்படப்பட்டன.

கிளிநாச்சி பன்னங்கண்டி பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பாடசாலை உபகரணங்கள், நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த குறித்த குழுவினர் பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்றிருந்ததோடு அங்கு பாடசாலை கட்டடங்களுக்கு வர்ணம் பூசியமையும் குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages