Breaking

Post Top Ad

Tuesday, January 15, 2019

மஹிந்த ராஜபக்ச ஆட்சியிலே பல கடத்தல், கொலைகள் இடம்பெற்றன என்பதை மறந்துவிட முடியாது!

மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் சிறப்பாக பேசப்படுகின்ற பிரதேசங்களே படுவான்கரை எழுவான்கரை பிரதேசங்களே அதிலும் படுவான்கரை பிரதேசம் விவசாய நிலங்களையும் பண்ணைகளையும் கொண்ட பிரதேசமாகத்தான் இருக்கின்றது இந்தப்பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் எழுவான்கரைப்பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. என முன்னால் பிரதியமைச்சரும் பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளருமாக சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கிராமத்திற்கு கிராமம் வீடமைப்புத் வேலைத்திட்டத்தின் கீழ் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுமுந்தன் வெளி கிராமத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இருபது பயனாழிகளுக்கு வீட்டுத்திட்டத்திற்கான வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

ஆனால் இந்தப்பிரதேசங்கள் கிட்டத்தட்ட அறுபது வறுடங்களுக்கு மேலக இதே நிலையில்தான் இருந்து கொண்டு வருகின்றது அதற்கொரு காரணம் உண்டு அனைவருக்கும் தெரிந்த விடயம் எமது நாட்டிலே ஏற்பட்ட பாரிய யுத்தமே. என்னைப் பொறுத்தமட்டிலே என்னுடைய அரசியல் வாழ்விலே கஷ்ரப்பட்ட நலிவடைந்த மக்கள் பிரதேசங்களை முன்னுரிமைப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே எனது முக்கியமான நோக்கம்.

2015 ஆம் ஆண்டு எமது நாட்டிலே பாரிய மாற்றம் ஒன்று இடம் பெற்றது அதுதான் ஜனாதிபதித்தேர்தல் அதிலே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தரா ரஜபக்ச அவர்கள் தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபாலசிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இந்த நாட்டிலே யுத்தத்தின் பின்னர் பல பிரச்சனைகள் இடம்பெற்று வந்தன மிகவும் பயங்கரமான சூழ்நிலை கடத்தல்,கப்பம்,வெள்ளை வேன் கடத்தல் இப்படிப்பட்ட துப்பாக்கி கலாச்சாரம் ஒன்றிலே நாங்கள் வாழ்ந்தோம் இன்று பாருங்கள் பல கொலைகளுக்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். அக்காலத்திலே நடைபெற்ற சம்பவங்களிலே திருகோணமலை மாணவர்களின் கொலைகள் மற்றும் கொழும்பிலே நடைபெற்ற பல சம்பவங்கள் எல்லாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தரா ரஜபக்ச அவர்களின் ஆட்சியிலே இடம்பெற்றன.


எங்களது தமிழ் மக்கள்களின் விடயத்திலே இரண்டு விடயங்களை முக்கியமாக கூறலாம் ஒன்று எழுபது வருடகாலமாக எங்களுடைய மக்களின் பிரச்சனைக்கு தீர்வுபெறும் நோக்கில் பல பேச்சுவார்த்தைகள் பல போராட்டங்கள் இடம்பெற்றன அதிலே இளைஞர்,யுவதிகள் ஆயுதப்போராட்டத்திலே ஈடுபட்டனர் அந்தப்போராட்டம்  பாரிய தோல்வியிலேயே முடிந்தது அதன் விளைவுகளே எங்களது தமிழ் மக்கள் வாழ்த பிரதேசங்களில் படைமுகாம்கள் பல்லாயிரக்களக்கான மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன 1983 ஆம் ஆண்டுடிற்கு முன்னர் இருந்த நிலையினை  ஒப்பிடும் போது யுத்தத்தினால் நாங்கள் இழந்ததே தவிர எதையும் பெறவில்லை

தற்போது ஆட்சியமைத்துள்ள தேசிய அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. ஆதன் அடிப்படையிலேதான் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்திலே விவதாத்திற்கு எடுக்கப்பட்டு அந்த அரசியல் பொதியினுடைய நிறைவேற்று விடயங்கள் தற்பொழுது கட்டம் கட்டமாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த தேசிய அரசாங்கத்தினை விழுத்தியதன் நோக்கமே இதுதான் அரசியல் பொதிகள் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்படுமோ என்ற அச்சம் இதனை கடும்போக்கு சிந்தனைவாதிகள் எதிர்க்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages