Breaking

Post Top Ad

Wednesday, January 9, 2019

பரிஸில் முடிவுக்கு வரும் நிர்வாண உணவகம்…!

நிர்வாணப்பிரியர்களுக்காக பரிசில் திறக்கப்பட்டிருந்த உணவகம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளது. குறைந்தளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாலேயே இது மூடப்பட உள்ளது.

பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் கடந்த நவம்பர் 2017 ஆம் ஆண்டு O’Naturel எனும் நிர்வாணப்பிரியர்களுக்கான உணவகம் திறக்கபப்ட்டிருந்தது.


இரவு உணவு மாத்திரம் வழங்கப்படும் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் நிர்வாணமாக அமர்ந்து உணவு அருந்தவேண்டும். இந்நிலையில், ஆரம்பத்தில் அதிகளவான வாடிக்கையாளர்களை கவர்ந்திருந்த போதும், தற்போது மிக குறைவான அளவு வாடிக்கையாளர்கள் வருகையால் இந்த உணவகம் மூடப்பட உள்ளது.


பெப்ரவரி 19 சனிக்கிழமையுடன் இந்த உணவகம் மூடப்பட உள்ளது. Mike மற்றும் Stephane Saada எனும் இரட்டையர் இணைந்து இந்த உணவகத்தை முதல் முதலாக பிரான்சில் திறந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages